50,000 போலி மருத்துவர்கள் – கண்டுகொள்ளாத சுகாதார அமைச்சு
நாடு முழுவதும் சுமார் 50,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
போலி வைத்தியர்களை ஒழுங்குபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பிரதி செயலாளர் டொக்டர் பிரசாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.