பொலிஸ் நிலையத்தில் கஞ்சா – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பொலிஸ் நிலைய மலசல கூடத்திற்குள்ளிருந்து கஞ்சா புகைத்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின்பேரில், கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை சோதனையிட்டபோது அவர் அணிந்திருந்த சேர்ட்டில் சிறிய கஞ்சா பக்கெற், லைட்டர் மற்றும் பாதி சிகரெட் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.