மூன்று மாடிக் கட்டிடத்தில் பாரிய தீ – மின்சாதனங்கள் மற்றும் ஜவுளிகள் நாயம்
வாத்துவ மொரந்துடுவ வீதியில் கந்தவுடவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் காட்சியறையில் தீ பரவியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, மூன்றாவது மற்றும் முதல் தளங்களுக்கும் பரவியதுடன், மின்சாதனங்கள் மற்றும் ஜவுளிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்த களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.