இலங்கையில் பிரிட்டன் பெண் பலாத்காரம் – 69 வயது முதியவர் கைது
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரிட்டன் நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 69 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் மிஹிந்தலை புனித பூமி பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்தின் பேரில் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 46 வயதுடைய பெண்ணே பாதிக்கப்பட்டவராவார். சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. ஜயந்த புஷ்பகுமாரவின் ஆலோசனையில்
மிஹிந்தலை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் என். ஆர். குணசேகர தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.