முட்டை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றம்
முட்டையின் விலை அதிகரிப்பின் காரணமாக கேக்கின் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாரிய முட்டை உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அதிக விலைக்கு முட்டைகளை கொள்வனவு செய்து கேக் போன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.