யாழ் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகள்


யாழ்ப்பாணத்தை அண்மித்த சர்வதேச கடலில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு செல்ல முற்பட்ட போது அவர்களது படகில் சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து இலங்கை மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

இதன்படி, 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்தநிலையில் அவர்களிடம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *