இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் பட்டமளிப்பு விழாவும்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இலங்கை மாணவர்களுக்கான தலைசிறந்த பட்டப்படிப்புக்களை வழங்கும் தொழில் சார் பல்கலைக்கழகம் அண்மையில் பேராசிரியர் செல்வநாயகம் தலமையில் தனது பட்டமளிப்பு விழாவினை சிறப்பாக யாழ்ப்பாணத்தில் ரில்கோ நட்சத்திரக்கோட்டலில் 17.12.2022நடாத்தியது..

நிகழ்வில் நிகழ்வின் இணைப்பாளராக விரிவுரையாளர் ம.புவனதாஸ் அவர்களும்,கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் திரு வேல்நந்தன் அவர்களும் விக்டோரியாக்கல்லூரி அதிபர் திருமதி.சிவபாலன் அவர்களும் ஆங்கில விரிவுரையாளர் திரு சண்முகசுந்தரம் அவர்களும் இமை மீடியாவின் பணிப்பாளர் திரு.தி.ரவிமயூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வில் பல மாணவர்கள் தங்களது பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.