இன்று முதல் சிற்றுண்டிகளின் விலைகள் குறைப்பு
அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சனிக்கிழமை (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.