பாட சாலை மாணவர்களுக்கானா அறிவிப்பு
கல்வி அமைச்சு மற்றும் ´உளவிழிப்புணர்வு பாடசாலை´ (Mindful school) இன் தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரரின் ´உளவிழிப்புணர்வு மன்றம்´ இணைந்து ´உளவிழிப்புணர்வை´ உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சித்திட்டமானது, சிக்கலாகவும் வேகமாகவும் இயங்கி வருகின்ற சமூகத்திற்கு முகங்கொடுத்து மாணவர்கள் தமது ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான அனுபவத்தை பாடசாலையிலேயே வழங்கி, அவர்களின் தவறான நடத்தைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக அமையும் இக்கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை நாடாளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, 2023 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 2023 மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கும், பின்னர் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 தொடக்கம் 7.40 வரைக்கும் 10 நிமிடங்கள் நடைமுறைப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.