வவுனியாவில் பரீட்சை நிலையத்திற்கு முன் மாணவர்கள் அடிபுடி

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர்.
குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
இன்றையதினம் குறித்த பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது. இந்நிலையில் அங்கு பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடத்தின் ஒருபகுதி நிறைவுற்றதுடன் நீண்ட நேரம் இடைவேளை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பரீட்சை மண்டபத்திற்கு வெளியில் ஒன்று கூடிய இரு பாடசாலைகளை சேர்ந்த ஆண் மாணவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர்.
இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பம் நீடித்ததுடன் போக்குவரத்தும் தடைப்பட்டது.
இதனையடுத்து வீதியால் செல்பவர்கள் அங்கு ஒன்று கூடியமையால் குறித்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Post

உக்ரைன் படைவீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கும் கனடா
உக்ரைன் படைவீரர்களுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் [...]

போராட்டத்தில் குதித்த வடக்கு மாகாண இ.போ.ச ஊழியர்கள்
இ.போ.ச வடக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் நியமனம் தொடர்பில் ஊழியர்கள் போராட்டத்தில் [...]

யாழில் தனியாக பயணித்த பெண்ணிடம் வழிப்பறி – (காணொளி)
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. [...]