கொழும்பில் மகிழுந்து விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு – கொள்ளுப்பிட்டி கார்கில்ஸ் வங்கிக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெரு(10) காலை குறித்த வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்பாக சென்று முச்சக்கரவண்டியுடன் மோதுண்டது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்கொஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்கள் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி
காலி முகத்துவாரப் பகுதியில் நேற்று (07) மாலை மூன்று நண்பர்களுடன் நீராடச் சென்ற [...]

வரிசையில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். பயாகல ஐஓசி நிரப்பு நிலையத்தில் [...]

வடக்கில் நிரந்தர வீடுகள் இல்லாதவர்ளுக்கு நிரந்தர வீடுகள்
வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர [...]