வரிசையில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
பயாகல ஐஓசி நிரப்பு நிலையத்தில் வரிசையில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் வரிசையில் இருந்த நபருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.