கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி
காலி முகத்துவாரப் பகுதியில் நேற்று (07) மாலை மூன்று நண்பர்களுடன் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
15 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவர்கள் கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.