2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

2 கிலோ கஞ்சாவுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் மற்றும் 573 வது படைகளின் கட்டளை அதிகாரி 573 பிரிக்கேடியர் பிரசன்னா ஆகியோரின் வழிநடத்தலில், இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 2 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதி 2 கிலோ மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுகிறது. இதன் போது, குறித்த வீட்டிலிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளது.
Related Post

மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு
மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் [...]

வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல் – ஒருவர் படுகாயம்
வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தமிழ் இளைஞர் [...]

சந்திர கிரகணத்தை காண இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்
4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது. [...]