மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு

மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று (19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி நேற்று முன்தினம் (18) காலையிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.
குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவி காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மாணவி நேற்று (19) மாலை புத்தளத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை மேலும் தெரிவித்தார்.
Related Post

சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் [...]

யாழில் விகாரையை அடியோடு அளிக்க ஒன்று கூடிய மக்கள்
வடக்கில் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழ் [...]

வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வில் பொலிஸாரால் பரபரப்பு
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு [...]