இலங்கையர்களுக்கு மீண்டும் eVisa வசதி
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.