வவுனியாவில் கல்வி நிலையம் முன் கூடிய மக்களினால் பதட்டம்


வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் முன்பாக 30 நிமிடங்களுக்கு மேல் அங்குள்ள மக்களால் ஒன்று கூட்டுள்ளது.

ஒன்று கூடிய மக்களினால் பதட்ட நிலமை ஏற்பட்டுள்ளது.

காரணம்
குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் ஓர் சில மாணவர்கள் தமக்கு கற்பித்தல் நடவடிக்கை தெளிவில்லை எனவே பிரிதொரு ஆசிரியரை நியமிக்கவும் அல்லது கட்டணத்தினை திருப்பித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு தனியார் கல்வி நிறுவனம் மறுப்பு தெரிவித்த நிலையிலையே அப் பதற்ற நிலைமை உருவாகியிருந்தமையுடன் அவ்விடத்தில் ஒன்று கூடிய சில நபர்கள் அங்கு பணிபுரியும் மற்றுமொரு ஆசிரியர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகி தலைமறைவாகியதுடன் குறித்த நிலமை தொடர்பில் கேட்கச்சென்ற ஊடகவியாளர்களையும் சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

விரைவில் இவற்றிற்கு தீர்வு பெற்றுத்தருவதாக தனியார் கல்வி நிலையத்தின் பெண் ஊழியர் வாக்குறுதியளித்தமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தன.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *