எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம்

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த, சந்திர கிரகணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு அளவிலான சந்திர கிரகணமாக தென்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 8 ஆம் திகதி மாலை 5.48க்கு சந்திரன் உதயமாகும் என்பதுடன், சந்திரக் கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காணமுடியும்.
மாலை 6.19க்கு பகுதியளவான சந்திரக் கிரகணம் நிறைவடையும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Related Post

யாழ் கொடிகாமத்தில் இரு சகோதரர்கள் அதிரடியாக கைது
யாழ்.கொடிகாமம் நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இராணுவ [...]

மானிப்பாய் மருதடி விநாயகரும் ஆவணி சதுர்த்தியும்
வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான மருதடி விநாயகர் ஆலயத்தின் இன்றைய தினம் ஆவணி [...]

யாழில் கணவன் மனைவி சண்டை – தாயும் 7 மாதக் குழந்தையும் சடலமாக மீட்பு
யாழில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயும் 7 மாதக் [...]