பெண் ஒருவருக்கு சாரத்தை உயர்த்தி காட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது

பெண் ஒருவருடைய வீட்டின் அருகில் உள்ள காணியில் விறகுவெட்டும்போது குறித்த பெண்ணுடன் உருவான வாய்த்தர்க்கம் முற்றியதில் சாரத்தை துாக்கி காட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் வலல்லாவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டுக்கு அருகே உள்ள காணியில் விறகு வெட்டும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முறைப்பாட்டாளரைக் கடுமையாகத் திட்டியதோடு,
சந்தேக நபர் தான் அணிந்திருந்த சாரத்தை உயர்த்திக் காட்டியதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்து – 9 மாத குழந்தை பலி
வேகக் கட்டு்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 மாத [...]

மட்டக்களப்பில் பொலிஸார் அராஜகம்- கொதித்தெழுந்த பிரதேச மக்கள்
மட்டக்களப்பு மேச்சல் தரைப் பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து [...]

யாழில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு – ஐவர் சிக்கினர், சிறுமிகளும் விளக்கமறியலில்
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை [...]