மட்டக்களப்பில் பொலிஸார் அராஜகம்- கொதித்தெழுந்த பிரதேச மக்கள்

மட்டக்களப்பு மேச்சல் தரைப் பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை,கைது செய்து பொலிஸார் அராஜகம் செய்ததாகக் கூறி பிரதேச மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை(5) சந்திவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்திவெளிப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகத் திரண்ட பெண்கள், தங்களுக்கு நீதி வழங்கமுடியாதவர்கள் தமக்கு ஆதரவாக வந்த மாணவர்களை கைதுசெய்து அநாகரிகமான செயற்பாட்டை செய்துள்ளதாக கூக்குரலிட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்கள் ஆட்பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்கும் – எரிசக்தி அமைச்சர்
மின்சாரக் கட்டணத்தை ஜனவரி மாதம் கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும் என்று தெரிவித்துள்ள எரிசக்தி [...]

உச்சம் தொட்ட மதுபானங்களின் விலை – புதிய விலைப்பட்டியல்
இன்று முதல் அமுலாகும் வகையில் சகல மதுபான போத்தல்களின் விலைகளும் உயர்த்தப்படுவதாக மதுபான [...]

யாழில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதி – 3 பேருக்கு தொற்று
யாழ்.போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட்19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் [...]