முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்து – 9 மாத குழந்தை பலி
வேகக் கட்டு்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் குருநாகல் – வெவரவும பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் நான்கு பயணிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்
அவர்களில் குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.