வவுனியாவில் வயோதிபரை மோதிய உந்துவண்டி – பதட்ட நிலை (காணொளி)

வவுனியா குருமன்காட்டு சந்தி அருகே அதிவேகமாக வந்த உந்துவண்டி மோதியதில் வயோதிபர் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
உந்துவண்டியில் குருமன்காடு பகுதியிலிருந்து காளிகோவில் வீதிக்கு மாறமுற்பட்ட வயோதிபர் மீது வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி ஊடாக சென்ற அதிக சிசி உடைய இரு உந்துவண்டிகளில் ஒன்று குறித்த வயோதிபரின் உந்துவண்டி மீது மோதியுள்ளது.
இவ் விபத்தில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியிருந்தார்
குறித்த இரு உந்துவண்டிகளும் அதிக வேகத்துடன் பயணித்ததாகவும் அதிவேகமே இவ் விபத்துக்கு காரணம் என தெரிவித்து விபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்களினால் பதட்ட நிலமை காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் இரு உந்துவண்டிகளையும் வவுனியா காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
இலங்கையில் மீண்டும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட [...]

தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பலி
கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாவந்தன் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்ட தொழிலாளி ஒருவர் [...]

உலகிலே முதன்முறையாக குரங்கம்மையால் ஏற்பட்ட பலி
நைஜீரியாவில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. இதைத்தான் டாக்டர் [...]