திருகோணமலையில் புகையிரதம் மோதி பெண் உயிரிழப்பு
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதம் மோதியதில் பெண்ணொருவர் இன்று (28) காலை பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் திருகோணமலை பூம்புகார் வீதியில் வசித்து வரும் மேரி சாந்தி (47வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.