பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை – காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தம்
பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான முறைப்பாட்டையடுத்து வத்தேகம காவல்துறை பிரிவின் சமூக காவல்துறை திணைக்களத்தின் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி காவல்நிலையத்திலிருந்து கடமைக்காக வெளியேறிய பின்னர் குறித்த உத்தியோகத்தர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பெண்மணிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட அதிகாரி, அவரது வீட்டிற்குச் சென்று வீட்டின் பின்னால் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் (27) கண்டி காவல்துறை அத்தியட்சகர் இந்த அதிகாரியை பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.