அனியூரிசம் நோயை குணப்படுத்தி யாழ் போதனா மீண்டும் சாதனை


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம் தாயொருவர் நலம் பெற்றுள்ளார்.

இதுவரை காலமும் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை (Surgical clipping) முறை மூலம் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தக் குழாயினூடாக மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையின் மூலம் தொற்று (Infection) ஏற்படும் வாய்ப்புகள் மிக குறைவு என்பதுடன், குறைந்த நாட்களில் நோயாளி வழமை போல் இயங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain Aneurysm) எனப்படும் நோய் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து வந்திருந்த வைத்திய நிபுணர்களின் (Interventional radiologists) பிரசன்னத்துடன் வைத்திய நிபுணர் Dr.Anton Jenil (Con.Interventional radiologist) இதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. Athiththan Ponnampalam (Con.Neuro surgeon) குறித்த தாயாரின் நோய்நிலையை கண்டறிந்து முதல், இச்சத்திரசிகிச்சையை பரிந்துரைத்துள்ளார்.

இந்த வெற்றிகரமான சிகிச்சையை மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் அனைவருக்கும் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *