வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வில் பொலிஸாரால் பரபரப்பு
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர்.
இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூறும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூறுவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து எடுத்து சென்றனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் மாவீரரின் பெற்றோர் பொலிஸாருடன் முரண்பட்ட போதிலும் பொலிஸார் உருவப்படத்தை எடுத்து சென்றதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், குறித்த உருவப்படத்தினை ஏற்பாட்டாளர்கள் கறுப்பு நிற வர்ணம் தீட்டி மீண்டும் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.