துருக்கியின் வட மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கமானது 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியுள்ளதுடன் பொருட்களும் கீழே விழுந்து உடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து டவுசி மாகாண பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.