அரசாங்கத்தை மாற்ற முனைந்தால் இராணுவத்தை பயன்படுத்துவேன்

அரசாங்கத்தை மாற்றுவதற்காக எவரும் முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தை பயன்படுத்தி அல்லது அவசரகாலசட்டத்தை நடைமுறைப்படுத்தியாவது அதற்கு இடம் தரப்படமாட்டாது என்று அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்று ரணில் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை சீராக்கிய பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் எவருக்கும் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்த முடியும். வீதியை நெருக்கடியை ஏற்படுத்தாமல், ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியும்.
எனினும் அதற்காக காவல்துறையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
Related Post

வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி
மீரிகம – பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் [...]

வேகமாக அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை
நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் [...]

பௌசர் கவிழ்ந்து விபத்து – வீணான 4000 லீற்றர் டீசல்
பேராதனை சரசவி உயன எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து மஹியங்கனை இ.போ.ச டிப்போவுக்கு 6600 லீற்றர் [...]