சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் – இருவர் கைது

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளார்.
தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து அவர் ஓடி தப்ப முயன்றபோதிலும், குறித்த குழுவினர் பின் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
எனினும், தாக்குதல் சம்பவத்திலிருந்து பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
Related Post

நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தம்புத்தேகம லுனுவெவயில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். [...]

18 வயதான காதலனை கடத்திய 17 வயது பெண் கைது
முச்சக்கரவண்டியில் 18 வயது இளைஞனைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய [...]

வானிலை தொடர்பான அறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை [...]