மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி துஷ்பிரயோகம் – திருமணமான 33 வயது நபர் கைது
பாடசாலை மாணவி ஒருவரை ஏமாற்றிக் கடத்திச் சென்றதுடன் குளியாப்பிட்டிய பகுதியில் தென்னம் தோப்பு ஒன்றுக்குள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பல் மாணவியின் காதலன் என கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து, குளியாபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தென்னந்தோப்பில்
காவலாளியாக பணிபுரியும் 33 வயதுடைய திருமணமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருமணமாகாதவர் எனத் தன்னைக் கூறிக் கொண்ட சந்தேகநபர், மாணவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார்.
சந்தேக நபர், மாணவியை ஏமாற்றி குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த மாணவி இதற்கு முன்னர் வேறு ஒருவரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும்,
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.