உலகின் மிகப்பெரிய “கோல்ட்ஃபிஷ்” வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வித்தியாசமான நிகழ்வு பிரான்சில் இருந்து பதிவாகியுள்ளது.
பிரான்சில் உள்ள புளூவாட்டர் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்தப் பெரிய “தங்கமீன்” அவருக்குக் கிடைத்தது. இந்த ராட்சத “தங்கமீனுக்கு” ‘தி கேரட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மீனின் எடை கிட்டத்தட்ட 30 கிலோகிராம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு முன்பு, உலகின் மிகப்பெரிய தங்கமீன் அமெரிக்காவில் 2019 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரான்சில் காணப்படும் இந்த மீன் அமெரிக்காவில் காணப்படும் மீனை விட 13 கிலோ எடை அதிகம். 42 வயதான பிரித்தானிய மீனவர் ஒருவரே இந்த மீனைக் கண்டுபிடித்துள்ளார்.