தகாத விடுதி முற்றுகை – 9 அழகிகள் கைது


கஹட்கஸ்திலிய பிரதேசத்தில் வசிக்கும் சகோதரிகள் இருவர், அநுராதபுரம் புதிய நகரில் நடத்திவந்த 2 விடுதிகளை நேற்று அதிகாலை சுற்றிவளைத்த பொலிஸார், 9 பெண்களை கைது செய்துள்ளனர்.

கொழும்பு, எப்பாவல, பொலன்நறுவை, நீர்கொழும்பு மற்றும் மஹாபுலங்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாவர்கள் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இந்த இரு பெண்களும் விபசார விடுதிகளை நடத்தி வந்ததாக தெரிவித்த பொலிஸார் ,

ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி உள்ளே நுழைந்ததும் அங்குள்ள பெண்களை, பத்தாயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும் இங்குள்ள பெண்களுடன் தமக்கு விருப்பமான இடங்களுக்குச் செல்வதென்றால் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட வேண்டும் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *