நெடுஞ்சாலையில் 48 வாகனங்கள் மோதி விபத்து – 8 பேர் மருத்துவமனையில்
புனேயில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் நவலே பாலம் அருகே இடம்பெற்ற பயங்கர விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாவலே பாலத்திற்கு அருகில் பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தின் பின்னர் பாரவூர்தியில் இருந்து எண்ணெய் கசிவு காரணமாக வீதி வழுக்கும் நிலை ஏற்பட்டது.
விபத்து காரணமாக, 2 கிலோமீட்டருக்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 10 முதல் 15 பேர் வரை லேசான காயம் அடைந்து, அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதுடன், சுமார் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை அளித்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்