மனைவியுடன் வாக்குவாதம் – கணவனை அடித்துக் கொன்ற இளைஞர்கள்
மனைவியுடன் வாக்குவாதப்பட்ட கணவன் 3 இளைஞர்களினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஊருபொக்க – கடவலகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடவலகம, பேரலபனாதர பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மூவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கடவலகம பிரதேசத்தை சேர்ந்த 32, 30 மற்றும் 19 வயதுடைய மூவர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஊருபொக்க பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.