யாழில் 2 பெண்கள் உட்பட 3 பேர் அதிரடியாக கைது

யாழ்.குடாநாட்டில் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணியந்தோட்டம் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும், 1.3 கிராம் போதைப் பொருளுடன் 42 வயதான அவருடைய கணவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும் கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண் ஒருவர் 2.5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸாரினால் அதிரடியாக பல இடங்களில் நேற்றைய தினம் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருள் வியாபாரிகளை இலக்குவைத்து இந்த சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு நாளில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CALL NOW