காசுக்காக நாடகமா..? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை பேசிய பொலிஸ் அதிகாரி


வெளிநாட்டு ஊடகங்களுக்கும் காசுக்காகவும் நாடகம் போடுகின்றார்கள் என தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை நோக்கி கூறியமையால் தாய்மார் கடும் கோபமடைந்தனர்.

ஜனாதிபதி வவுனியா வருகை தந்தபோது வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது அவர்களை மாவட்ட செயலகத்தை நோக்கி முன்னேறாமல் பொலிஸார் தடுத்திருந்த போது, அங்கிருந்த தமிழரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை பார்த்து ‘நீங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் காசுக்காகவும் நாடகம் போடுகின்றீர்கள்’ என தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீ ஒரு தமிழனாக இருந்து இவ்வாறு தெரிவிப்பது தவறு, உங்களை போன்றோரே எமது இனத்தின் துரோகிகள், இராணுவ அறிவித்தலுக்கு இணங்கி பிள்ளைகளையும் கணவனையும் நம்பி ஒப்படைத்து இன்று பறிகொடுத்த எமக்குத் தான் அதன் வலி தெரியும்’ என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நோக்கி கூறியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *