மட்டு. ஏறாவூரில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குடியிருப்பு ஆற்றில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று (16) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மயிலம்பாவெளி துரைச்சாமி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறீதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி மீன்பிடிப்பதற்காக குறித்த ஆற்றில் தோணியில் தனியாக சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று (16) காலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

வகுப்பறையில் மின்விசிறியில் அகப்பட்டு மாணவன் உயிரிழப்பு
புஸல்லாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். [...]

பயங்கரவாத தடை சட்டமூலம் – விளைவுகள் விபரீதமாக இருக்கும்
புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே [...]

யாழில் 4 கோடி பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது
இலங்கை சுங்க திணைக்களத்தின் யாழ்.காங்கேசன்துறை பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுமார் 4 [...]