வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்


வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

நேற்றிரவு (16) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இருந்துள்ளார். தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் படுத்திருந்துள்ளார்.

உணவு வாங்கிக் கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரணமாக குறித்த ஆசிரிய மாணவன் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துனள்ளனர்.

இதில், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் விவசாய பாடப் பிரிவின் முதலாம் வருட ஆசிரிய மாணவனான மட்டக்களப்பு, காரைத்தீவினைச் சேர்ந்த ஜிந்துஜன் என்பவரே மரணமடைந்தவராவார்.

இதேவேளை, உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *