யாழில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் இன்றையதினம் மனித சங்கிலி போராட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மருதனார்மடம் சந்தியில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான மனித சங்கிலி போராட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி முட்டாஸ் கடை சந்தியில் நிறைவடையவுள்ளது.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் , அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் பங்குகொண்டுள்ளனர்.
போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடமாடும் சேவை நடைபெற்ற இடத்தின் முன்பாக [...]

பல நாட்களாக மாணவி துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது
வத்தேகம பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் [...]

இந்தியாவில் குரங்கு அம்மையால் முதல் மரணம்
உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் [...]