காணாமல் போன 22 வயது பெண் – தேடுதல் தீவிரம்
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் பல நாட்களாக காணாமல் போன 22 வயதுடைய பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.
காணாமல் போன பெண், எல்பிட்டிய வெலிகல்ல, கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் Fathima Munawwara என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை அவர் வேலைக்குச் செல்வதற்காக பஸ் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த நிலையில், காணாமல் போனதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவர் வெலிகல்ல பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எல்பிட்டிய பள்ளிவாசலில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து பிரதேசவாசிகளின் உதவியுடன் கம்பளை பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன பெண் வெலிகல்ல நகரை நோக்கிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் அவர் குறித்த தடயங்கள் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.