யாழில் தனியாக பயணித்த பெண்ணிடம் வழிப்பறி – (காணொளி)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழிப்பறி தொடர்பான சிசிரிவி பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
கல்வியங்காடு GPs லேன் நேற்று காலை 6.30-7 மணி சைக்கிளில் சென்றவரிடம் சங்கிலி அறுப்பு 55 வயது 1 பவுண்..
Related Post

நாளைய மின்வெட்டு விபரம்
நாட்டில் நாளைய தினம்(22) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் [...]

யாழ் சாவகச்சேரியில் விபத்து – 35 வயதான இளைஞர் பலி
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் [...]

கோதுமை மாவின் விலை குறைப்பு
நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் [...]