நாளைய மின்வெட்டு விபரம்

நாட்டில் நாளைய தினம்(22) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் w வரையான வலயங்களிலும், காலை வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related Post

யாழ் வடமராட்சியில் மின்சாரம் தாக்கி 27 வயது நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காரைநகர் மயிலங்காடு [...]

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் ஆரம்பமாகிறது.
இதனை முன்னிட்டு, யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், [...]

வரிசையில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். பயாகல ஐஓசி நிரப்பு நிலையத்தில் [...]