முகமாலையில் பேருந்திலிருந்து விழுந்த குடும்பஸ்த்தர் உயிரிழப்பு
முகமாலை – இத்தாவில் பகுயில் பேருந்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த பேருந்திலிருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் யாழ்.போதன வைத்திசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிருழந்துள்ளார். உயிரிழந்தவர் கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராச் (47)வயதையுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.