யாழில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் தற்போது இடம் பெறுகிறது.
போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டுள்ளனர் மத குருமார்கள் சிவில் சமூகத் தலைவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.