கிளிநொச்சியில் பல குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அராசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 5 வயதுக்கு உட்பட்ட 576 சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 784 கர்ப்பிணித் தாய்மார்கள் வறுமையினால் பாதிக்கப்படுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்