சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் 6ம் ஆண்டு நினைவேந்தல்
பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களான கஜன், சுலக்ஸன் ஆகியோரின் 6ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் இன்று இடம்பெற்றது.
2016 ஒக்டோபர் 20ம் திகதியன்று இரவுநேரத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகில் பொலிசாரின் மிலேச்சத்தனமான துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நடராசா கஜன்,
பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோரின் நினைவுதினம் இன்றாகும். இதன்போது யாழ் பல்கலைக்கழகத்தில் கஜன் மற்றும் சுலக்சனின் உருவப்படத்திற்கு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றபட்டதோடு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.