பீன்ஸ் வகையில் ஒன்றான கொத்தரவங்காயில் அதிக சத்துக்கள் உள்ளது.
கொத்தரவங்காய் வெப்ப மண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கொத்தவரங்காய் அதிகம் பயிரிடப்படுகின்றன.
அதன் அறிவியல் பெயர் ‘சாயா மோடிஸ்கஸ் டெட்ராகோனோலோபஸ்’. ஆங்கிலத்தில் இது கிளஸ்டர் பீன் என்று அழைக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை கொத்தவரங்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
ஆயுர்வேத நிபுணர் கொத்தரவரங்காய் பற்றி குறிப்பிடுகையில் இதில் நார் சத்து அதிகம் காணப்படுகிறது என்கிறார். அதனால், இது கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொத்தரவரங்காய் இதயத்திற்கு நல்லது.
ஏனெனில் இது LDL அல்லது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இருதய பிரச்சினைகள் வரமால் பாதுகாக்கின்றன.
நீரிழிவு நோயாளிகள் தவறாமல் கொத்தரவரங்காயை உட்கொள்ள வேண்டும். கொத்தவரங்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காய்கறி. இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. அதே போல் அதில் உள்ள டைனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.
கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன. இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகின்றன.