இடிந்து விழுந்த பாடசாலை சுவர்
கடும் மழை காரணமாக வத்தேகம மகளிர் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் பாரிய பக்கச்சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றதுடன், இதன் காரணமாக பாடசாலையின் பல கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
பாடசாலை வளாகத்தை இலங்கை இராணுவத்தினர் துப்பரவு செய்து வருவதுடன் மாகாண கல்வி திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இன்று (21) மற்றும் நாளை (22) பாடசாலையை மூடுவதற்கு பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த பக்கச்சுவர் சுவர் இடிந்து விழுந்ததால் பாடசாலை கட்டிட வளாகம் சேதமடைந்துள்ளதா என்றும், எதிர்காலத்தில் என்ன மாதிரியான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பது குறித்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரடி கள ஆய்வில் ஈடுபடவுள்ளது.