கோர விபத்து – தாயும் மகனும் பலி, தந்தையும் மகனும் வைத்தியசாலையில்

முச்சக்கர வண்டியொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
42 வயதுடை தாய் மற்றும் அவரது 18 வயதுடைய மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்து பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related Post

நண்பனின் காதலி துஷ்பிரயோகம்
17 வயதான சிறுமி, அவருடைய காதலனின் நண்பனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், [...]

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற இளைஞர் திடீர் மரணம்
சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற இளைஞர் ஒருவர், திடீர் சுகயீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் [...]

பிரதமர் விடுத்துள்ள அவசர அழைப்பு
தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள கட்சி தலைவர்களுக்கு பிரதமர் ரணில் [...]