திலீபனை நினைவுகூர்ந்தவர்களை சிறையில் அடையுங்கள் – சீறும் விமல்
மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஆகும்.
இந்த அமைப்பில் இருந்து மரணித்தவர்களை யாராவது பகிரங்கமாக நினைவுகூர்ந்தால் அவர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் விமல் வீரவன்ச கூறினார் .